யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6 (2024) அனுமதிக்கு தகுதி பெற்றவர்களிற்கான அனுமதி 10.02.2024 (சனிக்கிழமை) ஆந் திகதி மு.ப 9.00 மணிக்கு இடம் பெறும். தாங்கள் பின்வரும் ஆவணங்களுடன் சமுகம் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
1. பாடசாலை விடுகைப்பத்திரம் (2023 மூன்றாம் தவணை முடிந்தவுடன் சமர்ப்பிக்கவும்)
2. பிறப்புச்சான்றிதழ் மூலப்பிரதி 02 (கட்டணமின்றி வழங்கப்பட்டதனை தவிர்க்கவும்.)
3. பிறப்புச் சான்றிதழ் போட்டோபிரதி 01
4. தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் அதனை உறுதிப்படுத்தும் B படிவம் மற்றும் மாணவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் போட்டோ பிரதி.
5. ஆரம்பப் பிரிவில் பங்குபற்றிய இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகள்
மாணவருக்குத் தேவையான கோவை (File), சீருடைச் சின்னம் (Badge), பாடசாலை கழுத்துப்பட்டி (Tie) என்பவற்றை பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர் ஒழுக்க விழுமியக் கோவையின் அடிப்படையில் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தாங்களும் தங்களது பிள்ளையும் பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பாடசாலை இணையத்தளத்தில் ஒழுக்க விழுமிய கோவையை பார்வையிட முடியும். அதனை தரவிறக்கம் செய்து வன்பிரதியை அனுமதியின் போது கொண்டு வரவும். மாணவிகள் பாடசாலையில் கல்வி கற்கும் காலம் முழுவதும் ஒழுக்கக் கோவையின் படி நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
- தரம் 6 இற்கான அனுமதி பெற்ற மாணவியையும் அன்றைய தினம் பாடசாலைச் சீருடையுடன் அழைத்து வரவும்.
ஒழுக்கக் கோவையினை தரவிறக்கம் செய்ய: Downloard