School Anthem

The lamps to light all mankind

From darkness, fear and doubt

Lift up to height celestial

And onward towards the light

Gleaming with love and service

Tread we though frail and weak

Onward upward proceed we

Towards the light we seek

பாடசாலை கீதம்

பல்லவி

கல்வியன்னை மீதே கவிகள் பாடுவோம்
கலைகள் பல கனிந்து சொரியும் காரணம் கலாசாலை

(கல்விஅன்னை)

அனுபல்லவி

பருத்தித்துறை பெயர் புனையும் பாங்குறும் நம் நகரில்
பண்புடன் ஒளிருமன்னை பாதை பேணும் தீபமாம்

(கல்விஅன்னை)

சரணம்

ஓங்கி நல்வளர் உயர்பனை மரமும்
ஓளிதனை பரப்பிடும் கலங்கரை விளக்கமும்
உயிர்கள் பல வாழும் கடல்தனையும் கொண்ட
எங்கள் பாடசாலை இன்ப சின்னம் நினைந்து

(கல்விஅன்னை)

எண்ணுமெழுத்தும் கண்ணெனத்தழுவி
நுண்ணிய விஞ்ஞானமும் செந்தமிழ் சங்கீதமும்
மாண்புறு மனையியல் ஓவியம் சரித்திரம்
மகிழ்ச்சியூட்டும் உடற்பயிற்சி மற்றும் கலைதான் கொண்ட

(கல்விஅன்னை)
பல் சிறார்களும் பாங்குடன் கூடி
பண்ணரிய ஒற்றுமை பூண்டோர் அன்னை சேய்கள் போல்
பொற்சுடராம் நல்லறிவைப் போற்றி நாட்டிற் சேவை செய்ய
பொற்பரனின் பாதமேற்றி வாழ்க என்றும் வாழ்கவே

(கல்விஅன்னை)

Scroll to Top
Scroll to Top