துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் போற்றி, தீய சக்திகளை வென்று நன்மைகளைப் பெறும் ஆன்மீக விழாவான நவராத்திரி பெருவிழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு தரங்களுக்கும் ஒவ்வொரு நாள் பூசைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பங்களிப்பினால் 9 நாள் பூசைகளும் நடைபெற்று, இறுதி நாள் வாணிவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவினதும் பூசைகளினதும் புகைப்பட தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
