எங்கள் பள்ளியில் மதிப்பிற்குரிய திருமதி மேறி ரஞ்சிலி பீற்றர் ஜெயசீலன் ஆசிரியர் அவர்களின் சேவை நயப்பு விழா சிறப்பாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நடைபெற்றது. கல்வித் துறையில் 37 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர் இன்று சிறப்பான ஓய்வைப் பெற்றார். அவரின் உழைப்பு, அன்பு மற்றும் வழிகாட்டுதல் அனைவராலும் பாராட்டப்பட்டு, விழாவில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.
