எங்கள் பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி பாலராணி சிறீதரன் அவர்களின் சேவை நயப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர் பதவி உயர்வுபெற்று கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகி சென்றிருந்தார். அவரின் உழைப்பு, அன்பு மற்றும் வழிகாட்டுதல் அனைவராலும் பாராட்டப்பட்டு, விழாவில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.
